வாட்ஸஅப் செயலியை தடை செய்ய கோரிய மனு - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
Seithipunal Tamil November 15, 2024 05:48 AM

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான ஓமனகுட்டன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், சமூக வலைதள செயலியான வாட்ஸ்ஆப், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-க்கு இணங்க மறுத்துவிட்டதாகவும், இதனால் வாட்ஸ்ஆப் செயலியின் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல், அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை வாட்ஸ்ஆப் மீறுவதாகவும், தேசிய நலன் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு வாட்ஸ்ஆப் செயலி அச்சுறுத்தலாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில், "வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை மாற்ற விரும்பவில்லை என்றாலோ, அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவில்லை என்றாலோ, அதை நாட்டில் செயல்பட அனுமதிக்கக்கூடாது. 

நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படும் பல வலைதளங்கள் மற்றும் செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.