உத்திரபிரதேச மாநிலத்தில் நவுரங்கியா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஜெய் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 பிள்ளைகள் இருக்கும் நிலையில் கடைசி மகளுக்கு 16 வயதாகிறது. இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது. இதன் காரணமாக அவரை பழிவாங்க ஜெய்நாராயணன் நினைத்தார்.
இதற்காக தன்னுடைய 16 வயது மகளை கொலை செய்துவிட்டு அந்த பழியை பக்கத்து வீட்டுக்காரர் மீது போட்டுவிட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய கிடுக்கு பிடி விசாரணையில் உண்மை தெரிய வந்தது. பக்கத்து வீட்டுக்காரரை சிக்க வைப்பதற்காக பெற்ற மகளையே ஒரு தந்தை கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.