ஜப்பானின் பேரரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரான இளவரசி யூரிகோ, தனது 101-வது வயதில் உயிரிழந்ததாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
இளவரசி யூரிகோ, பேரரசர் ஹிரோஹிட்டோவின் இளைய சகோதரரான இளவரசர் மிகாசாவின் மனைவியாகவும், தற்போதைய பேரரசர் நருஹிட்டோவின் அத்தையாகவும் இருந்தார்.
அவரது மரணத்தின் காரணம் தொடர்பான விவரங்கள் வெளிவராதபோதும், யூரிகோ நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் இதுதான் காரணமாக இருக்கக்கூடும் என்று ஊடகங்களில் தெரிவிக்கின்றன.
இளவரசி யூரிகோ 1923-ல் பிறந்து, இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக 18-வது வயதில் இளவரசர் மிகாசாவை திருமணம் செய்துகொண்டார்.
யூரிகோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு, “மார்ச் மாதத்தில் நிமோனியா பாதிக்கப்படும் முன்புவரை, அவர் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார். தனது நூற்றாண்டு காலத்தை சிறப்பாக கழித்தார்” எனப் புகழாரம் சூட்டினார்.