முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து தரக்குறைவாக பேசியது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி தெலுங்கு பேசும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை, மதுரை என காவல் நிலையங்களில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு, நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
நடிகை கஸ்தூரியின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து மதுரை திருநகர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நடிகை கஸ்தூரியின் வீட்டிற்கு சம்மன் வழங்க போலீசார் சென்றபோது, வீட்டின் பின்வாசல் வழியாக நடிகை கஸ்தூரி காரில் ஏறி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் செல்போனை சுவிட் ஆப் செய்து விட்டு நடிகை கஸ்தூரி தலைமறைவானார். பின்னர் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நடிகை கஸ்தூரியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் நடிகை கஸ்தூரி எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட நிலையில் மீண்டும் நடிகை கஸ்தூரி தலைமறைவானார். தற்போது நடிகை ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக போலீசார் எந்நேரமும் தன்னை கைது செய்யலாம் என்பதால் தமிழகத்தை விட்டு வெளியேறி ஆந்திராவில் நடிகை கஸ்தூரி தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.