சிவகார்த்திகேயனை விஜயாக மாத்த நடக்கும் வேலைகள்.. இப்படி ஒரு விழாவா?
CineReporters Tamil November 16, 2024 07:48 PM

சிவகார்த்திகேயன் நடிப்பில் திபாவளி ரிலீஸாக கடந்த மாதம் 31 ஆம் தேதி வெளியான திரைப்படம் அமரன். இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க ராஜ்கமல் நிறுவனம் சார்பாக கமல் இந்தப் படத்தை தயாரித்தார். படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சிலவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த ஒரு வீரரின் வீரமரணம் பற்றிய செய்திதான் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஹவுஸ் ஃபுல்: ஆனால் அதை எல்லாவற்றையும் தாண்டி அமரன் திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அனைவரின் மனதிலும் மேஜர் முகுந்த் வரதராஜனை உட்கார வைத்தது. சாய்பல்லவியின் நடிப்பு மெய்சிலிர்க்க வைத்தது. படம் வெளியாகி மூன்று வாரங்களை நெருங்கும் நிலையிலும் இன்னும் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடி கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க:

ஃபேமிலி ஆடியன்ஸ் படத்தை திரும்ப திரும்ப வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர். இந்த நேரத்தில் கங்குவா படமும் ரிலீஸாக அமரனின் ஹைப் இன்னும் குறைஞ்சபாடில்லை.இதனாலேயே கங்குவா படத்திற்கு திரையரங்குகள் குறைவானது. 420 திரையரங்குகள் கங்குவா படத்திற்காக ஒதுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் தான் என்றும் சொல்லி வருகிறார்கள்.

அடுத்த விஜய்: இதை பற்றி பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் கூறும் போது அது கரெக்ட்தான். அமரன் படம் அற்புதமான படம். ஆனால் அடுத்த விஜயா ஆகனும்னா இன்னும் அமரன் மாதிரி இரண்டு படங்கள் ஹிட் கொடுக்க வேண்டும் சிவகார்த்திகேயன் என கே. ராஜன் கூறினார். அப்படி தொடர்ந்து ஹிட் கொடுத்துவிட்டால் கண்டிப்பாக அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் தான் என கூறினார்.

#image_title

இதையும் படிங்க:

மேலும் அமரன் திரைப்படத்தின் வெற்றியை பெரிய அளவில் விழா எடுத்துக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறார்களாம். அந்த விழாவிற்கு ஸ்டாலினில் இருந்து கமல், ரஜினி என பெரிய முக்கிய பிரபலங்கள் வருவதாகவும் சொல்லப்படுகிறது. இது ஒரு வகையில் சிவகார்த்திகேயனை விஜயாக மாற்ற நடக்கும் ஒரு வேலைதான் என்றும் கே. ராஜன் கூறினார். ஆனால் சிவகார்த்திகேயன் அப்படி ஒரு இடத்திற்கு வந்து விட்டால் பழசை மறக்காமல் இருக்கவேண்டும். வளர்த்துவிட்டவர்களையும் மறந்து விடக் கூடாது என்றும் சிவகார்த்திகேயனுக்கு கே.ராஜன் அறிவுரைகளை வழங்கினார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.