துருக்கியில் டென்னிஸ் வீரரான அல்டக் செலிக்பிலெக் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் துனிசியாவில் நடைபெற்ற ஐடிஎப் டென்னிஸ் தொடரின் செமி பைனல் ஆட்டத்தில் இவர் கலந்து கொண்டார். இவர் யாங்கி எரெல் உடன் மோதினார். இந்த போட்டி கடந்த 1ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் ஆட்டம் தொடங்கி முதல் செட் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென அல்டெக் மயங்கு கீழே விழுந்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூளையில் அவருக்கு ரத்தகசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்தான் அவர் மயங்கி கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் கூறுகின்றனர்.