சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக தலைவர் விஜய் நிவாரண உதவி வழங்கியிருக்கிறார்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30 ஆம் தேதி கரையைக் கடந்தது. இந்த புயலால் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகின.
திருவண்ணாமலை நிலச்சரிவுகுறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ. 2000 கோடி நிவாரணம் வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக தலைவர் விஜய் நிவாரண உதவி வழங்கி இருக்கிறார். பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களை வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கியிருக்கிறார்.
Tvk Vijay250க்கும் மேற்பட்டோரை பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்த தவெக தலைவர் விஜய், அவர்களிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு, அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...