#BREAKING : அமைச்சர் பொன்முடியை சேற்றால் அடித்த பொதுமக்கள்.! வெள்ளத்தை பார்வையிட சென்ற போது ஆத்திரம்.!
Tamilspark Tamil December 03, 2024 09:48 PM
தத்தளிக்கும் மக்கள்

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக, ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு எடுத்து பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மக்கள் இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், தண்ணீர் திறந்து விடப்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, உணவுக்கு கூட வழி இல்லாமல் நடுவீதியில் நின்று அழுது கொண்டிருக்கின்றனர்.

பார்வையிடச் சென்ற பொன்முடி

இப்படிப்பட்ட சூழலில், அப்பகுதி, அரசியல்வாதிகள் கூட யாரும் சென்று பார்வையிடவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் செய்யவோ முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில், விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வெள்ள பாதிப்பை பார்வையிட சென்றுள்ளார். அப்போது இருவேல்பட்டு பகுதிக்கு அவர் சென்றபோது காரில் இருந்தவரை அங்கிருந்த வெள்ள நீரை அவர் பார்வையிட்டுள்ளார்.

இதையும் படிங்க:

அமைச்சர் மெத்தனப்போக்கு

மக்கள் நடுவீதியில் வீடு கூட இல்லாமல் நிற்கும் நிலையில், அதை பார்வையிட வந்த மக்கள் சேவகரான அமைச்சர் காரில் இருந்து இறங்காமல், பார்வையிட்டது அங்கிருந்த பொதுமக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, ஆத்திரமடைந்த அவர்கள் அமைச்சர் பொன்முடி மீது அங்கிருந்த சேற்றை வாரி இறைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.