இசைஞானி இளையராஜா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு..!!
Newstm Tamil December 03, 2024 10:48 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ் உள்ளிட்டப் பலர் நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. இதன் அறிமுக டீசரில் இளையராஜா இசையமைத்த ‘தங்கமகன்’ படத்திலிருந்து ‘வா வாப்பக்கம் வா’ பாடல் இசை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதற்காக இளையராஜா தரப்பிலிருந்து, ‘கூலி’ படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதுபற்றிச் செய்தியாளர்கள் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பியபோது, அதுகுறித்து தயாரிப்புத் தரப்பினரும் இளையராஜாவும் பேசிக் கொள்வார்கள் என முடித்து விட்டார்.

தற்போது ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா இருவரும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இதனால், ‘கூலி’ பிரச்சினை தீர்ந்து விட்டதா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.