அதிர்ச்சி வீடியோ... கடற்கரை பாறை மீது அமர்ந்து யோகாசனம்... ராட்சத அலையில் சிக்கி பிரபல நடிகை மரணம்!
Dinamaalai December 03, 2024 11:48 PM

தாய்லாந்தில் உள்ள கோ சாமுய் தீவுக்குச் சென்ற ரஷ்ய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா ராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். ராட்சத அலையில் சிக்கிய ரஷ்ய நடிகையின் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. 24 வயதான ரஷ்ய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா தனது காதலனுடன் விடுமுறையைக் கொண்டாட தாய்லாந்து சென்றிருந்தார்.


அங்குள்ள கோ சாமுய் தீவின் கடற்கரையில் உள்ள பாறையில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். இதை வீடியோவிலும் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், எதிர்பாராதவிதமாக எழுந்த ராட்சத அலை அவளை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அப்போது அருகில் இருந்த ஒருவர் நடிகையை காப்பாற்ற முயன்றார்.

ஆனால் அவரால் நடிகையைக் காப்பாற்ற முடியவில்லை. பின்னர், சில கி.மீ. தொலைவில். ரஷ்ய நடிகை இறந்து கிடந்தார்.

தீவில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு அருகில் செல்ல வேண்டாம் என உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதே சமயம் நடிகை யோகா செய்த இடத்தில் எச்சரிக்கை கொடிகள் மற்றும் பலகைகள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம் நடந்த இடம் இயற்கை காட்சிகளை ரசிக்கும் இடமாக இருந்தது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.