புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று விழுப்புரம். இந்தப் பகுதியில் மழைநீர் சூழ்ந்த சிலப் பகுதிகளில், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மக்கள் அதிருப்தியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு பகுதிக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி சென்றிருக்கிறார். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் சிலர் அவர்மீது சேற்றை வாரி வீசி எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்த மழைநீர்!திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்தது சேதம்.
திருவண்ணாமலை: சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!சேலம் கந்தம்பட்டி பைபாஸ் அருகே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``கடந்த மூன்று நாள்களாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. ஏற்காட்டின் வெள்ளப்பெருக்கு சேலத்தை பாதித்திருக்கிறது. திருமுனை முத்தாறு வழியாக வெள்ள நீர் சென்றுகொண்டிருக்கிறது. அதன் காரணத்தால் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்" முழு பேட்டி வீடியோவில்!
விடிய விடிய பெய்த மழையால் நாட்டறம்பள்ளி வாணியம்பாடி ரோடு செல்லும் வழியில் ஜோலார்பேட்டை ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழை நீர்!
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்!விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கி இருக்கும் வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்ஃபெஞ்சல் புயலின் தாக்கம் எதிரொலி காரணமாக, கள்ளக்குறிச்சி, அரியலூர், சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை.
டிசம்பர் 3 (இன்று) கனமழைக் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியல்.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. புதுச்சேரியிலும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிப்பு.
சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
திருவண்ணாமலை மண் சரிவு மீட்புப் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர்.
மீட்புப் பணிஅண்ணாமலை பல்கலைக்கழகத் தேர்வுத் தேர்வுகள் ஒத்திவைப்பு
ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் வடகடலோரப் பகுதிகள் உட்பட தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டு வருகிறது. நாளையும் (டிச.3) கனமழை பல மாவட்டங்களில் தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக நாளை (டிச.3) நடக்கவிருந்த அண்ணாமலை பல்கலைக்கழகத் தேர்வுகள் அனைத்தும் ஒத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.
அண்ணாமலை பல்கலைக்கழகம்திருவண்ணாமலையில் மண் சரிவு மீட்புப் பணி
திருவண்ணாமலையில் வ.உ.சி நகர் மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் சிறுவனின் சடலம் உட்பட 6 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை மையத்தின் வானிலை ரிப்போர்ட்
3.12.2024 (நாளை - செவ்வாய்)
மஞ்சள் அலார்ட் (கனமழை): கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர்.
இந்தக் கனமழையில் அதிக பட்சமாக வெள்ளம், மரங்கள் விழுவது, மண் சரிவு முதல் தாழ்வானப் பகுதிகளில் நீர் சூழ்வது வரையிலான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
திருவண்ணாமலையில் மண் சரிவு மீட்புப் பணி
திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கிய 7 பேரில் சிறுவனின் உடல் ஒன்று சடலமாக மீட்கப்பட்டிருக்கிறது. மண்ணில் சிக்கியுள்ள மீதமுள்ள 6 பேரின் உடல்களை மீட்கும் பணிகள் தீவிரம்.
சிறுவனின் உடல் மீட்புஊட்டி
ஊட்டியில் கன மழை காரணமாக வீடு இடிந்ததில் உயிரிழந்த ஆறுமுகம் உடலுக்கு அமைச்சர் மு.பெ சாமிநாதன் மரியாதை செலுத்தி, இறந்தவரின் குடும்பத்தாரிடம் இழப்பீட்டுத் தொகை வழங்கினார்.
ஊட்டிதிருவண்ணாமலையில் ஏற்பட்ட மலைச் சரிவில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணித் தீவிரமாக நடந்து வருகிறது. வீடுகளின் நெரிசலால் ஜே.சி.பி எந்திரம் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணி தாமதமாகிறது. பேரிடர் மீட்புப் படை பல்வேறு சாவல்களுக்கு மத்தியில் மீட்புப் பணியைத் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மீண்டும் மண் சரிவு
திருவண்ணாமலை மலையை ஒட்டியுள்ள பகுதியில் நேற்று (நவம்பர் 1) பாறை சரிந்து விழுந்து வீடுகள் மண்ணில் புதைந்து பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது.
ஏற்கனவே வ.உ.சி நகர் பகுதியின் இரண்டு இடத்தில் மண் சரிந்ததை அடுத்து தற்போது மூன்றாவதாக அந்த இடத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு, மேலும் ஒரு ராட்சத பாறை சரிந்ததால் அங்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்துக் கொண்டிருக்கும் சூழலிலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மண் சரிவில் சிக்கிய 7 பேரையும் மீட்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது தேசிய பேரிடர் மீட்புப் படை.
செய்தி:
விழுப்புரம்
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டிற்கு அருகில் உள்ள ஆலகிராமம் ஏரி நிரம்பி வழிகிறது.
புதுச்சேரி வெள்ள நிவாரணம் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயலால் கொட்டித் தீர்த்த அதி கனமழையால் புதுச்சேரியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பெரும் சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் ரூ.5,000 வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும், வெள்ளத்தால் சேதமடைந்த மாடுகளுக்கு ரூ. 40, 000, கிடாரி கன்றுக் குட்டிக்கு ரூ.20,000, சேதமடைந்த படகுகளுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிகிருஷ்ணகிரி:
பெஞ்சல் புயலின் தாக்கத்தால் கிருஷ்ணகிரி மாவட்டம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு மட்டும்தான் அவர் முதல்வரா? அவர் விழுப்புரம் சென்று இருப்பதை அறிகிறோம். மகிழ்ச்சி. ஆனால், அவர் எங்கள் பகுதிக்கும் வந்து எங்கள் நிலையை அறிய வேண்டும்.
ஊட்டி
ஊட்டியில் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள மற்ற வீடுகளின் உறுதித்தன்மை குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நிரம்பிய சித்தேரி...ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு கிராமத்தில் சித்தேரி ஏரி நிரம்பி வழிகிறது.
நிரம்பி வழியும் கிடங்கள் ஏரி!ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கிடங்கள் ஏரி நிரம்பி வழிகிறது .
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு:தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் (30.11.2024) கரையைக் கடந்தும் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை எதிர்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், புயல் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுவரும் முதல்வர் ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
முதல்வர் ஸ்டாலின்அப்போது, ``விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை கண்டிராத மழை பெய்திருக்கிறது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 900 மின் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் வடிந்த பகுதிகளில் உடனுக்குடன் மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மழை முழுமையாக நின்றதற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்டு இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.
உயிரிழந்தோர் குடும்பங்கள், கால்நடைகள், சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளைப் பார்வையிட மத்திய அரசு, மத்தியக் குழுவை அனுப்புவதோடு, பாதிப்புக்கு ஏற்ற நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைப்போம். நிவாரண நிதி தர வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. ஆனால் ஒவ்வொரு முறையும் அதைச் செய்ய மறுக்கிறார்கள்" என்றார்.