டிஃபென்ஸ் துறை 5 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு.... ரூ.21,772 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி....
ET Tamil December 04, 2024 12:48 AM
மத்திய அரசு பாதுகாப்பு துறை அதிக பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு துறைக்கு ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு துறையை தயார்நிலை வைத்திருப்பதற்காகவும் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தற்போது ரூ.21,772 கோடி மதிப்பிலான ஐந்து கையகப்படுத்தல் திட்டங்களுக்கு பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. வாட்டர் ஜெட் ஃபாஸ்ட் அட்டாக் கிராஃப்ட்ஸ், எலக்ட்ரானிக் வார்ஃபேர் சூட், ரேடார் வார்னிங் மற்றும் அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர்கள் போன்றவற்றின் கொள்முதல் இதன் மூலமாக மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த ஒப்புதலின் ஒரு பகுதியாக, இந்தியா கடற்படைக்காக 31 புதிய வாட்டர் ஜெட் ஃபாஸ்ட் அட்டாக் கிராஃப்ட்களை வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை குறைந்த தீவிரம் கொண்ட கடல்சார் செயல்பாடுகள், கண்காணிப்பு, ரோந்து, மற்றும் தேடல் மற்றும் மீட்பு போன்ற பணிகளை கடற்கரை பகுதியில் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. இந்த கப்பல்கள் அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடாவில், குறிப்பாக தீவுப் பகுதிகளைச் சுற்றியுள்ள கடற்கொள்ளையர் எதிர்க்க உதவும். All-Or-None orderக்கு 120 ஃபாஸ்ட் இன்டர்செப்டர் கிராஃப்ட் வாங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அவை உயர் மதிப்பு அலகுகளான விமானம் தாங்கிகள், போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றில் இந்திய கடலோரப் பாதுகாப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில், SU-30 MKI செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த எலக்ட்ரானிக் வார்ஃபேர் சூட் (EWS) கையகப்படுத்தல் தொடங்கப்படும். இதுமட்டும் இல்லாமல் வெளிப்புற வான்வழி பாதுகாப்பு ஜாமர், ரேடார் எச்சரிக்கை ரிசீவர் மற்றும் விமானத்திற்கான தொடர்புடைய உபகரணங்களைக் கொண்டிருக்கும். இந்த ஒப்புதல் காரணமாக நாளைய வர்த்தகத்தின் பாதுகாப்பு துறை பங்குகளின் விலை உயர வாய்ப்புள்ளது.
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.