பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் மேற்கொண்ட அதிரடி மாற்றங்கள்.... ஆர்பிஐயின் நெருக்கடி காரணமா?
ET Tamil December 04, 2024 12:48 AM
பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் ஆர்பிஎல் வங்கி மற்றும் டிபிஎஸ் வங்கி உடனான இணைப்பை துண்டிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளாக இந்த இரண்டு நிறுவனங்களுடன் இணைந்து இணை கிரெடிட் கார்ட் பிசினஸை மேற்கொண்டு வந்தது. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் காரணமாக இந்த முடிவை பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதாவது பஜாஜ் நிறுவனம் ஆர்பிஎல் வங்கி அல்லது டிபிஎஸ் வங்கியுடன் இணைந்து கிரெடிட் கார்டுகளை வழங்கி வந்தது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் எளிதாக கடன் பெறுவது, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். ஆனால் ஆர்பிஐ, மற்ற நிறுவனங்களிடமிருந்து கிரெடிட் கார்டை மட்டும்தான் பெறலாம், அதன் மூலமாக பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் பொருட்கள் வாங்கமட்டும் அனுமதிக்கலாம். அதே நேரத்தில் நிலுவை தொகையை வசூலிப்பது கூடாது என பஜாஜ் நிறுவனத்துக்கு அறிவுறுத்தி உள்ளது. இதை அடுத்து கோ பிராண்டாட் நிறுவனத்துடன் இணைந்து கார்ட் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஆர்பிஎல் வங்கி நிலுவையில் உள்ள கிரெடிட் கார்டுகள் அக்டோபர் வரை 5.17 மில்லியனாக உள்ளன. இதில் 3.4 மில்லியன் பஜாஜ் ஃபைனான்ஸ் உடன் இணைந்துள்ளது. ஆர்பிஎல் வங்கி 2016ம் ஆண்டு முதல் பஜாஜ் ஃபைனான்ஸ் இணைந்துள்ளது. 2022ம் ஆண்டு முதல் பஜாஜ் ஃபைனான்ஸ் உடன் இணைந்து டிபிஎஸ் பேங்க் இந்தியா தனது கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது. 5,00,000 கிரெடிட் கார்டு கொண்டுள்ளது. பஜாஜ் ஃபைனான்ஸ் ஒரு பெரிய வாடிக்கையாளர் தலைமை இயங்கி உள்ளது. நாட்டில் 4,200 இடங்களில் வலுவான சேகரிப்பு நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது. பஜாஜின் இணை பிராண்ட் கார்டு வணிகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஆர்பிஐயின் அறிவுறுத்ததால் கோ பிராண்டாட் கார்டுகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது. பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் பெரிய அளவிலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. விரைவாக கடன் வழங்குவது, வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கு கடன் என வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப கடன் வழங்கி வருகிறது.