குட் நியூஸ்..! 2 நாட்களில் சவரனுக்கு 1160 குறைந்த தங்கம் விலை..!
Newstm Tamil December 14, 2024 03:48 PM

இந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து கடந்த 11-ந்தேதி சவரன் 58 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. 12-ந்தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லாததால் ஒரு கிராம் தங்கம் ரூ.7,285-க்கும் ஒரு சவரன் ரூ.58,280-க்கும் விற்பனையானது. திடீரென நேற்று தங்கம் விலை குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,230-க்கும், ஒரு சவரன் ரூ.57,840-க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.101-க்கு விற்பனையானது.

 

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.57 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.7,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.