ஐந்து ரூபாய் காயின் இனி செல்லாது.. RBI அதிரடி அறிவிப்பு.. ஏன் தெரியுமா?
ET Tamil December 17, 2024 08:48 PM
இந்திய ரிசர் வங்கி நாணயம் மற்றும் நாணயங்களை அச்சிடுதல் மற்றும் அவற்றை உற்பத்தை செய்தல் போன்ற நிதிக் கொள்கைகளை நிர்வகித்து வருகிறது. அப்படியிருக்க ரிசர்வ் வங்கி சமீபத்தில் 5 ரூபாய் காயினின் புழக்கத்தை நிறுத்திவிடலாம் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன.இந்தியாவின் தற்போது ரூ.1 முதல் ரூ.20 வரையிலான நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. தற்போது இரண்டு வகையான ரூபாய் 5 நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. ஒன்று பித்தளையால் ஆனது, மற்றொன்று தடிமனான உலோக நாணயம். இருப்பினும், தடிமனான உலோக நாணயங்களின் புழக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது. ஏனெனில் இந்த நாணயங்கள் உற்பத்தையை அரசும், ரிசர்வ் வங்கியும் நிறுத்தி விட்டன.தடிமனான 5 ரூபாய் காயின் நிறுத்தப்பட்டதற்கு காரணம் அதற்கு ஆகும் செலவுதான் எனக் கூறப்படுகிறது. இந்த நாணயங்களில் பயன்படுத்தப்படும் உலோகத்தை உருக்கி ரேஸர் பிளேடு போன்ற பொருட்கள் தயாரிக்கப்படலாம் என்பதும் நாணயத்தை நிறுத்த முக்கிய காரணமாகும். அதுவும் ஒரு 5 ரூபாய் காயினிலிருந்து 4 முதல் 5 ரேஸர் பிளேடுகளை உருவாக்க முடியும் எனக் கூறியுள்ளனர்.அப்படியெனில் அதன் உற்பத்தி விலையைவிட அதிக லாபம் ரேஸர் பிளேடில் கிடைக்கிறது. ஏனெனில் ஒரு ரேஸர் பிளேடை அதே 5 அல்லது 10 ரூபாய்வரை விற்பனைக்கு உள்ளது. அதனால் இதன்மூலம் சட்ட விரோதமாக சில செயல்கள் நடப்பதாலும் அதன் உற்பத்தியை அரசு நிறுத்த திட்டமிட்டுள்ளது.அதனால் 5 ரூபாய் காயினை மெல்லியதாக உருவாக்க அரசும், ரிசர்வ் வங்கியும் அந்த தடிமனான ஐந்து ரூபாய் காயினை நிறுத்தியுள்ளது. அதற்குப் பதிலாக ரூ.5 மெல்லிய தங்க நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பொழுது சந்தையில் பித்தளை ஐந்து ரூபாய் காயினை மட்டுமே காண முடியும்.இதுவரை, நாட்டில் நாணயங்கள் மற்றும் நோட்டுகள் நிறுத்தப்பட்டதை பல முறை பார்த்துள்ளனர். 2016ஆம் ஆண்டு 500 மற்றும் 1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டன. கடந்த ஆண்டு, 2000 நோட்டுகளும் இந்திய ரிசர்வ் வங்கியால் நிறுத்தப்பட்டது. இதேபோல், 5 ரூபாய் நாணயம் தொடர்பாக வங்கியும் பெரிய முடிவை எடுத்துள்ளது.
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.