இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா Starbucks.. டாடா கன்யூமர் ஓபன் டாக்!
ET Tamil December 19, 2024 11:48 PM
இந்தியாவில் டாடா குழும நிறுவனத்துடன் கைகோர்த்த Starbucks இழப்புகள் தொடர் நஷ்டங்கள் மற்றும் அதிக மெயிண்டனஸ் செலவுகளால் இந்தியாவைவிட்டு வெளியேறுவதாக வதந்திகள் பரவின.அதற்கு உடனடியாக டாடா கன்ஸ்யூமர் நிறுவனம் Starbucks இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக இந்த மாதிரியான போலியான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும், மேலும் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக வெளியேறிய தகவல்கள் எல்லாம் பொய்யானவை என்றும் நிறுவனம் அனைத்து சந்தை செய்திகளுக்கும் விளக்கம் அளித்துள்ளது.டிசம்பர் 19 அன்று, ராஜஸ்தானை தளமாகக் கொண்ட ஒரு ஊடக அமைப்பு, தி ஃபிலாக்ஸ், ஸ்டார்பக்ஸ் விரைவில் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் அதிக செலவுகள், மோசமான சுவை மற்றும் பெருகிவரும் நிதி இழப்புகள் காரணமாக ஸ்டார்பக்ஸ் இந்தியாவிலிருந்து வெளியேறும்" என்ற தலைப்பில் அறிக்கையை வெளொயிட்டுள்ளது.மேலும் இந்திய நுகர்வோர் மலிவான உள்ளூர் பொருட்களையே விரும்புவார்கள், வெளிநாட்டு பொருட்களின் சுவையும் இருக்காது போன்ற பல காரணங்களை அடுக்கி உள்லது. அதற்கு டாடா கன்ஸ்யூமர்ஸ் இந்த செய்து அடிப்படையற்றது (baseless) எனக் கூறி இந்தத் தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளது.இந்த செய்திகள் ஒருபுறம் இருக்க இன்று காலை (டிசம்பர் 16) டாடா நுகர்வோர் பங்குகள் 0.5% உயர்ந்து ஒவ்வொன்றும் ரூ.914.75 ஆக இருந்தது. நாளின் முடிவில் 0.26% சரிவுடன் ரூ.907-க்கு வர்த்தகமாகி உள்ளது.டாடா ஸ்டார்பக்ஸ், அமெரிக்க காபி பிராண்டான ஸ்டார்பக்ஸ் மற்றும் இந்திய நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும். இது 450 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களுடன் நாட்டின் மிகப்பெரிய கஃபே சங்கிலியாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கதுகடந்த நிதியாண்டில் டாடா ஸ்டார்பக்ஸ் விற்பனை 12% உயர்ந்து ரூ.1,218 கோடியாக இருந்தது, நிகர இழப்பு ரூ.25 கோடியில் இருந்து ரூ.80 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் வருவாய் ஓரளவு மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால் பிசினஸ் ஐடியாக்களை வழங்கும் டோஃப்லரின் தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் டாடா ஸ்டார்பக்ஸ் வருவாய் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இருமடங்காக அதிகரித்துள்ளது.
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.