நம்மில் பலருக்கும் தினமும் காலையில் டீ, காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. அவ்வாறு இல்லாமல் தேநீரில் ஒரு சிறு மாற்றம் செய்து குடிப்பதால் நமக்கு அழகும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
எந்த வகையான தேநீரை பருகலாம்.?
தேநீர் என்பது கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டி தேயிலையை சேர்த்து மூடி வைத்து அதனை வடிகட்டி குடிப்பதே தேநீர் என கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், உலகிலேயே தேநீரில் பால் சேர்த்து பருகுபவர்கள் இந்தியர்கள் மட்டும் தான்.
இதையும் படிங்க:
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியை சேர்த்து கொதிக்க வைத்து அதில் தேன் கலந்து இளஞ்சூடாக பருகலாம்.
மற்றொரு நாள் ஆவாரை தேநீர் பருகலாம். " ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ? " என சித்த மருத்துவம் கூறுகிறது. அப்படிப்பட்ட, இந்த ஆவாரம்பூ வறண்ட நிலப்பரப்பில் அதிகம் கிடைக்கும். ஆகையால், சிரமம் பார்க்காமல் நாம் இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், இளஞ்சூடான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு கலந்து பருகலாம். ஆகையால், முடிந்தவரை டீ, காபி இதற்கு பதிலாக கிரீன் டீ மற்றும் பிளாக் டீ போன்றவற்றை பருகலாம்.
குறிப்பு :
இந்த பானங்களை நீங்கள் குடிப்பதற்கு முன்னர் உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.
இதையும் படிங்க: