வரும் ஜனவரி 12-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தெரிவிக்கையில், புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 2,000 காவலர்கள் மற்றும் 500 தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.
கடற்கரை சாலையில் இரவு 12.30 மணி வரை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் கடலில் இறங்காமல் இருக்க தடுப்புகள் அமைக்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.
மேலும், ஜனவரி 11-ம் தேதி துணைநிலை ஆளுநர், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தலைமையில் தலைக்கவசம் அணிவது குறித்து மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது.
தொடர்ந்து ஜனவரி 12-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். சிறிது நாள் களைத்து, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியவேண்டும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.