ஞாபகத்திறன் சிறப்பாக இருக்க இதை சாப்பிடுங்க போதும்
Top Tamil News December 28, 2024 10:48 AM

பொதுவாக வாழை மரத்திலிருந்து வாழைக்காய் ,வாழை தண்டு எடுக்கப்பட்டு நமக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது .தென்னை மரத்திலிருந்து தேங்காய் இளநீர் கிடைத்து நமக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது .அது போல பனை மரத்திலிருந்து நுங்கு ,பனை வெல்லம் ,பனங்கற்க்கண்டு கிடைத்து நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் .இதன் ஆரோக்கியம் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த பனங்கற்கண்டுவுடன் நெய் ,மற்றும் நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் நமக்கு ஆற்றல் அதிகரிக்கும் .


 
2.சிலருக்கு ஜலதோஷ பாதிப்பு உண்டாகி , தொண்டையில் தொற்று ஏற்பட்டு தொண்டை கட்டிக்கொள்கிறது இதனால் அவர்களால் சரியாக பேசமுடியாமல், சாப்பிட முடியாமலும் சொல்ல முடியாத வேதனைக்கு ஆளாகின்றனர் .
3.அவர்களின் இப்பிரச்சனையை போக்க 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி மற்றும் தொண்டை கட்டு சீக்கிரம் குணமாகி அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்
4.சிலருக்கு ஞாபக மறதி ஏற்பட்டு கொண்டேயிருக்கும் ,சிலர் எப்போதும் நல்ல நினைவாற்றலுடன் இருப்பர்
மூளையின் செல்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் நபர்களுக்கு ஞாபகத்திறன் அதிகம் இருக்கிறது.
5.ஞாபகத்திறன் சிறப்பாக இருக்க  சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிப்பதோடு கண் பார்வை கோளாறுகளும் நீங்கும் என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.