இமாச்சல் பிரதேச மாநிலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு நிகழ்கிறது. அதன் பிறகு ஓட்டுநர்கள் வழுக்கும் பாறைகளில் சில நேரம் ஏறும்போது சறுக்கு ஆபத்துகளில் சிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது நிகழ்ந்துள்ளது. அதாவது மணாலி அருகே சோலாங் பள்ளத்தாக்கில் ஒரு பனி மூடிய காலையில் ஒரு டிரக் வாகனம் சென்று கொண்டிருந்தது.
இந்த வாகனம் திடீரென பள்ளத்தாக்கில் வழுக்கி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அப்போது இரவு நேரம் என்பதால் வாகனத்தை விட்டு டிரைவர் கீழே குதித்த நிலையில் தன்னுடைய வாகனம் கீழே விழாமல் இருக்க அவர் அதனை பிடித்து இழுக்கிறார். ஆனால் தரை வழுக்கியதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்தது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.