தென் கொரியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
தென் கொரியாவில் முவான் விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து தென்கொரியா வந்து, தரையிறங்கிய விமானம் திடீரென விபத்தில் சிக்கியது. தரையிறங்கும் கருவி பழுதடைந்ததால் விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய விமானத்தில் 175 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் என மொத்தம் 181 பயணம் செய்தனர்.
இந்நிலையில் விமானத்தில் இருந்த 181 பேரில், இருவரை தவிர 179 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிர் பிழைத்த இருவரில், ஒருவர் பயணி மற்றும் மற்றொருவர் பணியாளராவார். இத்தகவலை தென் கொரியாவை சேர்ந்த யோனாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தின் சுற்றுச்சுவரில் விமானம் மோதி, இரண்டு துண்டுகளாக உடைந்து தீப்பிடிக்கும் முன் இடி போன்று பயங்கர சத்தம் வந்ததாக அருகில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.