அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்று அதிகாலையில் காலமான செய்தி அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் (அதிமுக) தமிழ்மொழி ராஜ தத்தன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.
தமிழ்மொழி ராஜதத்தன் கடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் மேல்மலையனூர் சட்டமன்றத் தொகுதியில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2006 சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் கவுன்சிலர் பதவியை வகித்து வந்த தமிழ்மொழி ராஜதத்தன், அதிமுகவின் செயற்குழு உறுப்பினராகவும், விழுப்புரம் வடக்கு மாவட்ட மகளிர் பிரிவின் செயலாளராகவும் பதவி வகித்து வந்துள்ளார். இவரது மறைவுக்கு அதிமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.