தமிழகத்தில் மீண்டும் கனமழை… “தேதி குறிச்ச வானிலை மையம்”… வந்தது அலர்ட்..!!
SeithiSolai Tamil January 09, 2025 03:48 AM

தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதன் பிறகு ஜனவரி 11ஆம் தேதி தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.