அரசு மதுபானக் கடைகளில் முதல்வர் படம்; பாஜக., கோரிக்கை!
Dhinasari Tamil January 09, 2025 03:48 AM
ரவிச்சந்திரன், மதுரை

தமிழக அரசு கூட்டுறவு மருந்துக் கடைகளிலும் நியாய விலைக் கடைகளிலும் முதல்வர் படம் இடம்பெறுவது போல், அரசு மதுபானக் கடைகளிலும் முதல்வர் படம் இடம்பெற வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர்.

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகத்திலும், குறிப்பாக அரசு கூட்டுறவு மருந்து கடைகள், அரசு நடத்துகின்ற நியாய விலைக் கடைகளிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. அதேபோல், அரசு நடத்துகின்ற மதுபானக் கடைகளிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் இடம் பெற வேண்டும் என்று கூறி, பாஜக மாவட்ட நிர்வாகி சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அதில், மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தோராயமாக 318 அரசு மதுபானக் கடைகளை பாதியாகக் குறைக்க வேண்டும், மேலும் அரசு அனைத்து மதுபானக் கடைகளும் மூடினாலும் வரவேற்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News First Appeared in
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.