நாடு முழுவதும் இனி விபத்தில் சிக்கியவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும்… மத்திய மந்திரி நிதின் கட்காரி அதிரடி அறிவிப்பு…!!!
SeithiSolai Tamil January 09, 2025 04:48 AM

இந்தியா முழுவதும் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு கட்டணம் இல்லா சிகிச்சை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். அதன்படி 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் விபத்தில் சிக்கியவர்களுக்கு கட்டணம் இல்லாமல் மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் கடந்த வருடம் மார்ச் மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்முறையாக தொடங்கப்பட்ட நிலையில் பின்னர் 6 மாநிலங்களில் விரிவு படுத்தப்பட்டது.

அதாவது விபத்து நடந்த 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து விட்டால் இந்த திட்டம் அமலுக்கு வந்துவிடும். இந்த திட்டத்தின் படி விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 7 நாட்களுக்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படும். கடந்த வருடம் மட்டும் 1.8 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்த நிலையில் இதில் 40 ஆயிரம் பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 60% பேர் கிட்டத்தட்ட 18 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.