திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பெளர்ணமி தினத்தை முன்னிட்டு கிரிவலம் செல்ல பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நினைத்தாலே முக்தியளிக்கும் திருவண்ணாமலையை சுற்றி கிரிவலம் வருவது கைலாயத்தில் வீற்றிருக்கும் சிவ பெருமானையே சுற்றி வந்து வழிபடுவதற்கு சமமானதாகும்.
இந்த வருடத்தின் முதல் பெளர்ணமி திதி இன்று துவங்குகிறது. இன்று ஜனவரி 13ம் தேதி காலை 5.21 மணிக்கு பெளர்ணமி துவங்கி நாளை ஜனவரி 14ம் தேதி காலை 4.40 வரை உள்ளது. இந்த நேரங்களில் கிரிவலம் மேற்கொள்ளலாம்.
திங்கட்கிழமை சிவ தரிசனம், போகி பண்டிகை, ஆருத்ரா தரிசனம், தை மாத பிறப்பு என பல சிறப்புகள் ஒரே நாளில் சேர்ந்து வரும் தினத்தில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது அளவில்லாத பலன்களை அள்ளிக் கொடுக்கும்.