இன்று சென்னை - நெல்லை வரை பொங்கல் விடுமுறை சிறப்பு ரயில் இயக்கம்!
Dinamaalai January 13, 2025 12:48 PM

பொங்கல் தொடர் விடுமுறைக்கான சிறப்பு ரயில் இன்று சென்னையில் இருந்து நெல்லை வரை இயக்கப்பட உள்ளது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பலரும் பொங்கல் பண்டிகையை உறவினர்களுடன் கொண்டாட சொந்த ஊர் நோக்கி பயணிப்பார்கள் என்ப்தால் தொடர் விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக தென்னக ரயில்வே சார்பில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருநெல்வேலியிலிருந்து  சென்னை தாம்பரத்திற்கு ஜனவரி 19, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் வண்டி எண் 06092 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடையும்.

மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து இன்று ஜனவரி 13ம் தேதி மற்றும் ஜனவரி 20,27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் வண்டி எண் 06091 திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் செவ்வாய்கிழமை அதிகாலை 4.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோயிலுக்கு ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் வண்டி எண் 06089 சென்னை சென்ட்ரலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை காலை 11.30 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பகல் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறு மார்க்கத்தில் இன்று ஜனவரி 13 மற்றும் ஜனவரி 20 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் வண்டி எண் 06090 நாகர்கோவிலில் இருந்து திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடைகிறது.

சென்னை தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13, 20, 27 ஆகிய தேதிகளில்  சிறப்பு ரயில் வண்டி எண் 06093 திங்கட்கிழமை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் செவ்வாய்கிழமை காலை 10.40 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நண்பகல் 12.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். 

மறு மார்க்கத்தில் ஜனவரி 14, 21, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் வண்டி எண் 06094 கன்னியாகுமரியிலிருந்து செவ்வாய்கிழமை மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.12 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் புதன்கிழமை காலை 6.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று ஜனவரி 13,18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் வண்டி எண் 06103 மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும். 

மறு மார்க்கத்தில் ஜனவரி 12, 14, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் வண்டி எண் 06104 ராமநாதபுரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. இன்று 4ந்தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.