அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தருணம்'. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். மேலும், ராஜ் ஐயப்பன், பால சரவணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பெண்கள் மீதான பாலியன் வன்கொடுமையை மையமாக வைத்து கதையை உருவாக்குவதுதான் இப்போதைய டிரெண்ட். அந்த விதத்தில் வந்துள்ள மற்றுமொரு படம் தான் இது. 'தேஜாவு' படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கொஞ்சம் கவனிக்கப்பட்டவர் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன்.
சிஆர்பிஎப்-ல் அதிகாரியாக இருப்பவர் கிஷன்தாஸ். ஒரு ஆபரேஷனில் தனது சக அதிகாரியைக் கொன்றதற்காக சஸ்பென்ட் ஆகிறார். அவர் மீதான விசாரணை சென்னையில் நடக்கிறது. அங்கு வந்து நண்பனுடன் தங்குகிறார். அப்போது ஸ்மிருதி வெங்கட்டைப் பார்க்க அவர் மீது காதல் வருகிறது. இருவருக்கும் திருமண நிச்சயமும் ஏற்பாடுகிறது. இதனிடையே, ஸ்மிருதியின் அபார்ட்டிமென்ட்டில் உள்ள ராஜ் ஐய்யப்பாவைக் கொன்று விடுகிறார் ஸ்மிருதி. அந்தக் கொலையை மறைக்க கிஷன் தாஸ், ஸ்மிருதி முயற்சிக்கிறார்கள். எதனால், ராஜ் ஐய்யப்பாவை ஸ்மிருதி கொன்றார், செய்த கொலையை அவர்கள் மறைத்தார்களா, மாட்டிக் கொண்டார்களா என்பதுதான் மீதிக் கதை.
இந்நிலையில் நேற்று திரையரங்குகளில் வெளியான 'தருணம்' திரைப்படத்தின் திரையிடல் நிறுத்தி வைக்கப்படுவதாக படக்குழு அறிவிப்பு!
குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டுமே வெளியானதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம். புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது