தமிழ் சினிமாவில் முன்னணி இசைமினி அமைப்பாளராக இருப்பவர் சந்தோஷ் நாராயணன். இவர் திருச்சியில் பிறந்து கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். கல்லூரி படிப்பை முடித்த இவர், ரெக்கார்டிங் இன்ஜினியரிங்கில் புரோக்ராமராக வேலை பார்த்துள்ளார். அதன் பிறகு தான் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சூது கவ்வும், மெட்ராஸ், காலா, கபாலி, வடசென்னை, அந்தகன், வா வாத்தியார் என்று ஏராளமான படத்தில் இசையமைத்துள்ளார். தற்போது இவர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ரெட்ரோ என்ற திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பழமொழிகளிலும் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் தான் ஓய்வில் இருக்கும் போது ஆட்டோ ஓட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சொந்தமாக ஒரு ஆட்டோ வைத்திருக்கிறார் என்றும், விருப்பப்பட்டால் அதனை எடுத்து ஓட்டுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தன்னை யார் என்று தெரியாதவர்களுக்கு இலவசமென்று கூறிவிடுவார், தன்னை தெரிந்தவர்களுக்கு ஆட்டோவில் ஏற்ற மாட்டார் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சந்தோஷ் நாராயணன் எந்த தகவலும் வெளியிடவில்லை. இருப்பினும் இப்படி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.