ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக திருமகன் ஈவெரா இருந்த நிலையில் அவர் உடல் நலக்குறைவினால் காலமானார். அதனால் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட போது அவருடைய தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். ஆனால் அவர் கடந்த வருடம் உடல்நல குறைவினால் காலமானார்.
இதன் காரணமாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய காட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்தது. முன்னதாக தமிழக வெற்றிக்கழகமும் போட்டியிடவில்லை என அறிவித்தது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர்.