இல்லத்தரசிகள் ஷாக்..! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
Newstm Tamil January 17, 2025 06:48 PM

பொங்கல் திருநாள் தொடங்கியது முதல் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், இன்று மேலும் உயர்ந்துள்ளது.

காணும் பொங்கல் தினமான நேற்று(ஜன.16ஆம் தேதி) சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,390க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.59,120க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜன.17ஆம் தேதி) சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7450க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,600க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.104க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,04,000க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.