ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு திருநாவுக்கரசு தெருவில் தமிழ்ச்செல்வன்-ஜோதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜோதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆற்காட்டில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் ஜோதிக்கு அவரது தாய் வீட்டிலேயே பிரசவம் பார்த்தார்.
அப்போது தாயும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜோதியின் தாய் குழந்தையின் உடலை ஒரு கட்டைப்பையில் வைத்து மறைத்து விட்டார். அதன் பிறகு தனது மகளை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, அவர் இறந்துவிட்டதாக நாடகம் ஆடினார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்த போது பிரசவம் ஆகிய பிறகு தான் ஜோதி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.