200 ரூபாய் நோட்டு நிறுத்தப்படுமா.. RBI முடிவு குறித்து வெளியான முக்கியத் தகவல்!
ET Tamil January 17, 2025 07:48 PM
இந்தியாவில் இப்பொழுது அதிக புழங்கும் நோட்டுகள் என்றால் அது 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள்தான். சொல்லப்போபால் அனைவரின் பாக்கெட்டிலும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை காண முடியும்.தற்போதைய இந்த 200 ரூபாய் நோட்டை மோடி அரசு நிறுத்தப் போகிறதா? ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் கூறப்படுவது என்ன? அதை இனி பின்வருமாறு பார்க்கலாம்.கள்ள நோட்டுகள் பரவுவதை தடுக்க, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. பரிவர்த்தனையின் போது நோட்டுகளை முறையாக சரிபார்க்க இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. யாரேனும் கள்ள நோட்டு கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக உள்ளூர் நிர்வாகம் அல்லது சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இப்பொழுது RBI இன் முகப்பு பக்கத்தில் 200 ரூபாய் நோட்டை அடையாளம் காணுவதற்கான குறிப்புகள் இருப்பதை காணலாம்.2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி கூறியது. இப்பொழுது நாட்டில் 200 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பரிவர்த்தனையின் போது கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களை எச்சரித்துள்ளது.சமீபத்தில் மக்கள் 200 ரூபாய் நோட்டு உண்மையானதா என்பதை கண்டறியும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் உண்மையான 200 ரூபாய் நோட்டை கண்டறியும் வழிமுறைகளையும் மக்களுக்கு, வங்கிகளுக்கு அறிவித்துள்ளது.https://paisaboltahai.rbi.org.in/rupees-two-hundred.aspx இந்த லிங்கை க்ளிக் செய்து ஒரிஜினல் 200 ரூபாய் நோட்டை கண்டுபிடிக்கவும்.உங்கள் பாக்கெட்டில் இருக்கும் 200 ரூபாய் நோட்டு போலியா இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது? இதை அறிய, நீங்கள் அதை அடையாளம் காண வேண்டும். 200 ரூபாய் நோட்டின் இடது பக்கத்தில் தேவநாகரி எழுத்தில் 200 என்று எழுதப்பட்டுள்ளது. நடுவில் மகாத்மா காந்தியின் மிகத் தெளிவான படம் மற்றும் 'RBI', 'பாரத்', 'இந்தியா' மற்றும் '200' ஆகியவை மிகச் சிறிய எழுத்துக்களில் அதாவது மைக்ரோ எழுத்துருவில் எழுதப்பட்டுள்ளன. வலது புறம் அசோக தூண் சின்னம் இருக்கும்.இதையெல்லாம் ஆராய்ந்து மக்கள் நோட்டுகளை வாங்கவும் என முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் 200 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தில் கடும் சவால் இருப்பதால், ரிசர்வ் வங்கி இதை நிறுத்தலாம் என்ற பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டிருப்பதாக் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதுமில்லை. இந்திய ரிசர்வ் வங்கி விழிப்புணர்வு குறித்த அப்டேடுகளை மட்டுமே கொடுத்துள்ளதால் மக்கள் குழம்ப வேண்டாம். அதேசமயம் ரூபாய் நோட்டுகள் சரிபார்ப்பு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கொடுத்துள்ள அடையாளங்களை வைத்து பாதுகாப்பாக இருக்கவும்.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.