Fact Check: 200 ரூபாய் நோட்டு நிறுத்தப்படுமா.. வெளியாகும் ரூமர்கள்.. உண்மைத் தன்மை என்ன?
ET Tamil January 18, 2025 12:48 AM
![](https://shengbo-xjp.oss-ap-southeast-1.aliyuncs.com/Upload/File/2025/01/18/0048313505.jpg)
இந்தியாவில் இப்பொழுது அதிக புழங்கும் நோட்டுகள் என்றால் அது 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள்தான். சொல்லப்போபால் அனைவரின் பாக்கெட்டிலும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை காண முடியும்.தற்போதைய இந்த 200 ரூபாய் நோட்டை மோடி அரசு நிறுத்தப் போகிறதா? உண்மை நிலவரம் என்ன என்பதை இனி பின்வருமாறு பார்க்கலாம்.2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி கூறியது. அதேபோல இப்பொழுது பல ஊடகங்களில் 200 ரூபாய் குறித்த பல தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாகவே இந்திய ரிசர் வங்கி கள்ள நோட்டுகள் பரவுவதை தடுக்க, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறிவருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி எப்பொழுதெல்லாம் ஒரு புதிய ரூபாய் நோட்டை வெளியிட்டாலும், அதனை எப்படி அடையாளம் காண்பது என்பதைப் பற்றிய விவரங்களை வெளியிடும். அப்பொழுதும் யாரேனும் கள்ள நோட்டு கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக உள்ளூர் நிர்வாகம் அல்லது சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று ரிசர்வ் வங்கி பொதுவான அறிவிப்பாக வெளியிடும் ஒன்றுதான்.உங்களுக்கு கள்ள நோட்டு குறித்த சந்தேகம் இருக்கும்பட்சத்தில் நீங்கள் 200 ரூபாய் நோட்டு உண்மையானதா என்பதை கண்டறிய https://paisaboltahai.rbi.org.in/rupees-two-hundred.aspx இந்த லிங்கை க்ளிக் செய்து ஒரிஜினல் 200 ரூபாய் நோட்டை கண்டுபிடிக்கவும்.அதனால் 200 ரூபாய் நோட்டுகளை நிறுத்தலாம் என்ற பேச்சு வார்த்தையில் RBI ஈடுப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் உண்மை இல்லை. RBI தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதுமில்லை. அதனால் போலியான செய்திகளை நம்பி மக்கள் குழம்ப வேண்டாம்.இந்திய ரிசர்வ் வங்கி விழிப்புணர்வு குறித்த அப்டேடுகளை மட்டுமே கொடுத்துள்ளதால் மக்கள் குழம்ப வேண்டாம். அதேசமயம் ரூபாய் நோட்டுகள் சரிபார்ப்பு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கொடுத்துள்ள அடையாளங்களை வைத்து பாதுகாப்பாக இருக்கவும்.