கரூர் மாவட்டத்தில் உள்ள அரங்கநாதன் பேட்டையில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் இளவரசன் 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் இளவரசனை கைது செய்தனர். இளவரசன் வெள்ளியணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.