“உன் நல்லதுக்கு தானே கேட்டேன்…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. பெரும் சோகம்….!!!
SeithiSolai Tamil January 19, 2025 09:48 PM

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சள் குப்பம் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்பிஏ பட்டதாரியான தினேஷ்(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் வேலைக்கு செல்லவில்லை. கடந்த 13 ஆம் தேதி தினேஷின் தாய் மாரீஸ்வரி தனது மகனிடம் வேலைக்கு செல்லாமல் இருந்தது குறித்து கேட்டுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த தினேஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தினேஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.