செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண்களின் சேமிப்பிற்காக கொண்டு வரப்பட்டது. பெண்கள் உயர் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகை 1000 ரூபாய் ஆகும். அருகில் இருக்கும் அஞ்சல் அல்லது வங்கிகளில் இந்த தொகையை செலுத்தி கணக்கை தொடங்க முடியும். பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணத்தை செலுத்த முடியம். அதிகபட்சம் 1.5 லட்சம் வரை வருடம் வைப்பு தொகையாக செலுத்த முடியும். வருடம் 1.25 லட்சம் செலுத்தினால் அதாவது மாதம் 10 ஆயிரம் வரை செலுத்தினால் 21 வருடம் கழித்து 50 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இந்த சேமிப்பு தொகையை வருமான வரி ரிட்டர்ன் செலுத்தும் போது காட்டி வருமான விலக்கு பெற முடியும். உதாரணமாக 1.5 லட்சம் ரூபாய் மாதம் கட்டுகிறீர்கள் என்றால் அதற்கு விலக்கு பெற்றுக்கொள்ள முடியும். வருமான வரிச் சட்டப் பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தின் இடையில் உங்களுக்கு பணம் தேவைப்படுகிறது.உதாரணமாக பெண்ணின் மேல்படிப்பிற்கு பணம் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அதுவரை சேமித்து வட்டியோடு இருக்கும் பணத்தில் 50 சதவிகிதத்தை.. அதாவது பாதியை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு தேவையான ஆவணங்களை நீங்கள் கொடுக்க வேண்டும். அதேபோல் மேலும் இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் கூடுதல் வட்டிக்கும் கூட வருமான வரி செலுத்த தேவை இல்லை.
சேமிக்கும் வழிமுறை: 10 வயதுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் பெயரில் திட்டத்தை தொடங்கலாம். பெண் குழந்தைகள் வயது 10ஐ கடந்ததும் அவர்கள் பெயருக்கு திட்டத்தை மாற்றிக்கொள்ள முடியும். 15 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய முடியும். 21 ஆண்டுகளுக்கு பின் டெபாசிட்டை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்ய முடியும். 2 ஆயிரம் ரூபாய் முதலீடும் செய்ய முடியும். இந்த சேமிப்பு திட்டத்தில் 8 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படுகிறது. மேலும் கூடுதல் கூட்டு வட்டி கிடைக்கும். இதனால் நீங்கள் 2 ஆயிரம் ரூபாயை 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் 21 ஆண்டுகள் வட்டியோடு சேர்த்து உங்களுக்கு 11.16 லட்சம் ரூபாய் கிடைக்கும்.