நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட்ட 06 பேர் மீது மேலும் இரண்டு வழக்கு பதிவு ..!
Seithipunal Tamil January 21, 2025 12:48 PM

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி நேற்று காலையில் ஈரோடு பஸ் நிலையம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுள்ளார். 

அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட நாம் தமிழர் கட்சியினர் 8 பேர் மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் கருங்கல்பாளையம் ஜீவாநகரில் வேட்பாளர் சீதாலட்சுமி தனது கட்சி நிர்வாகிகளுடன் நேற்று மாலையில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்துள்ளார். 

அவர்களும் உரிய அனுமதி பெறாமல் விதிமுறையை மீறி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக பறக்கும் படை அதிகாரி நவீன்குமார் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்தவகையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 06 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.