ஐ.பி.எல் 2025; லக்னோ அணிக்கு கேப்டனான ரிஷாப் பன்ட் நியமனம்..!
Seithipunal Tamil January 21, 2025 12:48 PM

ஐ.பி.எல் 2025 லக்னோ அணிக்கு கேப்டனாக ரிஷாப் பன்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல் போட்டியின்  18வது சீசன் வரும் மார்ச்சில் தொடங்குகிறது. இதற்கான வீரர்கள் 'மெகா' ஏலத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டர் ரிஷாப் பன்ட், அதிக பட்சமாக ரூ. 27 கோடிக்கு லக்னோ அணிக்கு வாங்கப்பட்டார். ஏற்கனவே இவர், ஐ.பி.எல் -இல் டில்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்டார்.

இது குறித்து, ரிஷாப் பன்ட் கூறுகையில், ''லக்னோ அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி. அணியின் வெற்றிக்கு 200 சதவீதம் பங்களிப்பேன். அணியில் திறமையான இளம் வீரர்களுடன், அனுபவ வீரர்கள் இருப்பது பலம். 

அணியை சிறப்பாக வழிநடத்துவது குறித்து நிறைய கேப்டன், சீனியர் வீரர்களிடம் இருந்து கற்றுக்கொண்டுள்ளேன். ஒரு வீரரை எப்படி கவனித்துக் கொள்வது என்பதை ரோகித் சர்மாவிடம் இருந்து தெரிந்து கொண்டேன். சகவீரர்களுடன் இணைந்து முதன்முறையாக கோப்பை வென்று தர முயற்சிப்பேன்,'' என்று கூறியுள்ளார். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.