வெம்பக்கோட்டை அகழாய்வு - சுடுமண்ணால் ஆன குடுவை கண்டெடுப்பு.!
Seithipunal Tamil January 27, 2025 08:48 PM

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளம் பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் சுடுமண் முத்திரை, கண்ணாடி மணிகள், மண் குடுவை, மண்பாண்ட பாத்திரங்கள் உள்பட 3,200-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வில் கூடுதலாக சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவ பொம்மையின் கால் பகுதி சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது. அத்துடன் சிறுவர்கள் விளையாட பயன்படுத்தும் சிறிய அளவிலான மண்குடுவையும், வெள்ளை நிற சங்கு வளையலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்ததாவது:- "தொல் பொருட்களை ஆவணப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அகழாய்வு முழுமையாக முடிவடைந்த எட்டு குழிகள் மூடப்பட்டுள்ளன. 

மீதமுள்ள எட்டு குழிகளை பிற மாவட்டங்களில் இருந்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், பார்வையிட வருவதால் மூடப்படாமல் உள்ளது. விரைவில் கூடுதலாக அகழாய்வு குழிகள் தோண்டப்படவுள்ளது" என்றுத் தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.