அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தொடர்பாக, புதுப்பிக்கப்பட்ட பட்டியலை ஜனவரி 28ஆம் தேதிக்குள் தயார் செய்யும்படி பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
உதவித்தொகைக்காக நிலுவையில் உள்ள மாணவர்களின் விவரப்பட்டியலும், செயல்படாத வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களும் அனுப்பப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நிலுவைப் பட்டியலை ஜனவரி 28ஆம் தேதிக்குள் தயார் செய்து, அதற்கான வழிமுறைகளை அலுவலர்களுக்கு வழங்கவும், புதுப்பிக்கப்பட்ட பட்டியலை வழங்க தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு அஞ்சல் அலுவலகங்கள் மூலம் வங்கிக் கணக்குகள் தொடங்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.