“அம்பேத்கரின் அரசியலமைப்புக்கு பாஜகவால் பேராபத்து ஏற்பட்டுள்ளது”… ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு..!!
SeithiSolai Tamil January 27, 2025 08:48 PM

மதுரை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலம் பெற்று பா.ஜனதா ஆட்சி செய்து வருகிறது. ஆனால் நாட்டின் குடிமக்களுக்கான ஆட்சியாக அமைந்துள்ளதா? என்று கேட்டால் இல்லை, பா.ஜனதா பொறுப்பேற்ற பிறகு இந்திய வளர்ச்சி பாதையில் செல்கிறது என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

ஆனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது, காரணம் அவருக்கு முன்னால் ஆட்சி செய்த ஜவர்கலால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரதமர்கள் உருவாக்கிய அஸ்திவாரத்தில் தான் பாஜக தற்போது பயணித்து வருகிறது. நம்முடைய நாட்டில் மொத்தமாக 144 கோடி மக்கள் வாழ்கின்றனர், அவர்களில் 20 கோடி பேர் ஏழையாக உள்ளனர். அவர்களின் விவசாய கடன், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர்கள் வைத்த கோரிக்கைகளை பா.ஜனதா நிறைவேற்றுவதில்லை.

ஆனால் பெரு முதலாளிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது. தற்போது அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புக்கு பாஜக-வால் பேராபத்து வந்துள்ளது.அவற்றை பாதுகாக்க வேண்டும் என்றால் பாஜகாவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.