Breaking: பெண்களிடம் துடப்பத்தால் அடி வாங்கி பாலியல் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி… ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு..!!
SeithiSolai Tamil January 31, 2025 06:48 AM

காஞ்சிபுரத்தில் பட்டப் பகலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் அதிமுக எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் பொன்னம்பலம் 60 என்பவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் பின் காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் அஜார் படுத்தத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். வயது மூப்பு காரணமாகவும், பொன்னம்பலத்திற்கு சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டி அவரது வழக்கறிஞர் நீதிபதியிடம் வாதத்தை முன்வைத்த நிலையில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.