யார் அந்த சார்..? எனக்கு தெரியும்… ரெகார்டு இருக்குது.. ஆதாரத்தை வெளியிடப் போகிறேன்… பாஜக அண்ணாமலை பரபரப்பு அறிவிப்பு..!!
SeithiSolai Tamil January 31, 2025 06:48 AM

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், சார் என்ற ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகிறது. ஆனால் ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி வேறு யாருக்கும் தொடர்பு கிடையாது என்று அரசும் காவல்துறையும் மருத்துவர் நிலையில் தற்போது யார் அந்த சார் என்பது எனக்கு நன்றாக தெரியும் என அண்ணாமலை கூறியுள்ளார். இந்த செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை ஞானசேகரன் டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் யாரிடம் செல் போனில் பேசினான் என்ற விவரம் என்னிடம் இருக்கிறது.

கடந்த ஒரு வருடமாக ஞானசேகரன் யாரிடமெல்லாம் பேசினான் என்ற கால் ரெக்கார்டு என்னிடம் இருக்கிறது. அந்த சார் யார் என்பது எனக்கு நன்றாக தெரியும். குற்றம் நடந்த பிறகு டிசம்பர் 25ஆம் தேதி தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே டிசம்பர் 23 மற்றும் டிசம்பர் 24ஆம் தேதி மாணவியை பலாத்காரம் செய்த பிறகு செல்போனில் ஞானசேகரன் பேசினான். இதில் சில காவல்துறையினருக்கும் தொடர்பு இருக்கிறது. எனக்கு யார் என்பது தெரியவரும். ஆனால் எல்லாவற்றையும் வெளியிட நான் ஒன்னும் காவல்துறை கிடையாது. காவல்துறையே இந்த விவகாரத்தை வெளியிட வேண்டும் என்று தான் விரும்புகிறேன். ஒருவேளை நீங்கள் சொல்லாவிடில் கண்டிப்பாக நான் ஆதாரத்தை வெளியிடுவேன் என்னிடம் ஆதாரம் இருக்கிறது.

பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் எஃப் ஐ ஆர் ஐ தன் செல்போனில் வைத்திருந்ததற்காக போலீசார் மிரட்டியுள்ளனர். அந்த எஃபைஐஆரை ஏன் வைத்திருந்தார்கள் என்று கேட்பதைவிட அந்த எஃப் ஐ ஆர் ஐ லீக் செய்தது யார் என்று கேட்பதுதான் சரியாக இருக்கும். ஆனால் காவல்துறை இந்த வேலையை சரியாக செய்யவில்லை. மேலும் யார் அந்த சார் என்ற விவரத்தை நீங்கள் வெளியிடாவிடில் கண்டிப்பாக நானே அதனை சொல்லி விடுவேன் ஆதாரமும் இருக்கிறது என்று அண்ணாமலை கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.