குஜராத் மாநிலத்தில் உள்ள தாகூர் மாவட்டத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த 35 வயது பெண் வசித்து வருகிறார். இவர் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 29-ஆம் தேதி அந்த பெண் தனது ஆண் நண்பரின் வீட்டிற்கு சென்றார். இதனால் கோபமடைந்த பெண்ணின் மாமனார் பகதூர், கணவரின் சகோதரர் சஞ்சய், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த சில பெண்கள் இணைந்து அத்துமீறி அந்த நபரின் வீட்டிற்குள் நுழைந்தனர்.
அதன் பிறகு அந்த பெண்ணை கடுமையாக தாக்கி மோட்டார் சைக்கிளில் கட்டி சாலையில் இழுத்து சென்றனர். பின்னர் அவரது ஆடைகளை அவிழ்த்து கைகளை சங்கிலியால் கட்டி ஊர்வலமாக கிராமம் முழுக்க இழுத்து சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக 15 பேர் கொண்ட கும்பல் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.