கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் ஸ்ரீது-ஸ்ரீஜித் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவேந்து என்ற இரண்டு வயது மகன் இருந்துள்ளார். நேற்று காலை தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதற்கிடையே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை தேடிய போது வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் குழந்தையின் உடல் கிடந்தது. இதுகுறித்து அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டனர். பின்னர் குழந்தையின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தையின் பெற்றோரிடமும், மாமாவிடவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.