பிரக்ஞானந்தாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
Dinamaalai February 04, 2025 07:48 PM

டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் வெற்றி பெற்று  பிரக்ஞானந்தா சென்னை திரும்பியுள்ளார். அவருக்கு  விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில்  பிரக்ஞானந்தா  போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. போட்டியின் போது முடிவெடுக்க குறைவான நேரமே இருந்தது. 


எந்த நொடியிலும் ஆட்டம் மாறலாம் என்ற நிலை இருந்தது. வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. 2024ல் என்னால் சரியாக பர்பாமன்ஸ் செய்ய முடியவில்லை. இந்தாண்டு தொடக்கத்திலேயே எனக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த போட்டிக்காக சிறந்த முறையில் பயிற்சி பெற்றேன். இந்த வெற்றியானது, எனக்கு மிகவும் முக்கியமானது என கூறியுள்ளார்.  

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.