டெல்லி அணிக்கு எதிராக ரஞ்சி போட்டியில் பங்கேற்க ரயில்வேஸ் அணி வீரர் ஹிமன்ஷு சங்க்வான் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது ஓட்டுநர் நீங்கள் 4 அல்லது 5-வது ஸ்டாம்பை குறிவைத்து பந்து வீசுங்கள் கோலியை அவுட் ஆக்கலாம் என்று கூறினார்.
ஆனால் நான் ஒருவரின் பலவீனத்தை பயன்படுத்தி அவரின் விக்கட்டை எடுப்பதை விட எனது சொந்த முயற்சியின் மூலம் விக்கட்டை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி விரட்டின் விக்கெட்டை வீழ்த்தவும் செய்தேன் என்று கூறியுள்ளார்.