சோகம்... கிரிக்கெட் விளையாடியபோது இளைஞர் மயங்கி விழுந்து மரணம்!
Dinamaalai February 05, 2025 03:48 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் கிரிக்கெட் போட்டியின் போது, ரன் எடுக்க ஓடிய வீரர் திடீரென மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் ஜான்சன் (46), நில புரோக்கர்.  இவருக்கு 
திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். 

கிரிக்கெட் வீரரான இவர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு மீளவிட்டான் மைதானத்தில் நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டார். 

இந்நிலையில், போட்டியின் போது ரன் எடுக்க ஓடிய போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்குப்பதிந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

!

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.