#featured_image %name%
திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக அரசு தடை விதித்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்துக்களை கைது செய்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்த உடன் குவிந்த இந்து அமைப்பினரால் பழங்காநத்தம் அதிர்ந்தது.
திருப்பரங்குன்றம் கந்தர் மலையை மீட்போம் என இந்து அமைப்பினர் இன்று போராட்டத்திற்கு அறிவித்திருந்தனர். அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில் நீதிமன்றம் வாயிலாக அனுமதி பெறப்பட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு வெளியான சில நிமிடங்களிலேயே சுமார் ஆயிரக்கணக்கில் பழங்காநத்தம் தில் கூடத் தொடங்கினர்.
ஆண்கள் மட்டுமல்லாத பெண்களும் அதிக அளவில் குவிய தொடங்கியதால் மாற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
சுமார் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். இதன் மூலம் இப்பகுதியில் ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். எனினும் ஐந்து மணிக்கு மேல் தான் நீதிமன்றம் உங்களுக்கு ஆர்ப்பாட்டமும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முன் யாரும் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என காவல்துறை தெரிவித்தது.
இதன் பின்னர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று மாலை 5 :00 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியதன் பேரில் அங்கு திரளான முருக பக்தர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரன் ஆகிய சிவபெருமானுக்குச் சொந்தமான திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. அங்கே மலைமீது அண்மையில் கட்டப்பட்ட தர்காவில் முஸ்லிம்கள் சிலர் மாமிச உணவு உண்டதால் பதற்றம் நிலவியது. உயிர்பலி கொடுக்க போலீசார் தடை விதித்ததைக் கண்டித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்த திமுக அரசு அனுமதித்த நிலையில், அதனை தொடர்ந்து மலையை காக்க, அறப்போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு மதுரை நகர திமுக அரசின் போலீசார் அனுமதி மறுத்தனர். 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்து முன்னணி சார்பில் வழக்கு தொரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, விழாக்காலமான பிப்., 11 வரை அனுமதி வழங்குவது கடினம் என அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி போராட்டம் நடத்தலாம். இதற்கு போலீசார் உரிய பாதுகாப்பைத் தர வேண்டும். பொது அமைதிக்கு பிரச்னை ஏற்படுத்தாத வகையில் ஆர்ப்பாட்டம் இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டம் நடத்துவது உரிமை என்றாலும், அது அரசியலமைப்புக்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஒரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெறுப்பைத் தூண்டும் வகையிலான முழக்கங்கள் இருக்கக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
இதனையடுத்து மதுரை பழங்காநத்தத்தில் ஏராளமான முருக பக்தர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் அறப்போராட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுக்கும் நோக்கத்துடன், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேரை திமுக அரசின் போலீசார் கைது செய்தனர். மடத்தை விட்டு வெளியேறக்கூடாது என்று மதுரை ஆதினத்துக்கு போலீசார் தடை விதித்தனர்.
திருப்பரங்குன்றம் மலை முருகப் பெருமானுக்கு சொந்தமானது. அதில் அமைந்துள்ள தர்கா ஒன்றை காரணம் காட்டி, மலையில் ஆடு, கோழி வெட்ட இஸ்லாமிய அமைப்பினர் முயற்சிக்கின்றனர். இதற்கு இந்து முருக பக்தர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதையடுத்தே இந்து முன்னணி சார்பில், இன்று திருப்பரங்குன்றம் மலையை காக்கும் அறப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதை தடுக்கும் நோக்கத்துடன், போலீசார், மாநிலம் முழுவதும் கைது, வீட்டுக்காவல் நடவடிக்கை எடுத்து பா.ஜ., இந்து முன்னணி தொண்டர்களை அடைத்து வைத்தனர்.
அதன்படி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக., மூத்த தலைவர் ஹெச்.ராஜா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். திருப்பூரில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்.
நெல்லையில் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றால நாதன் கைது செய்யப்பட்டார். மேலும் வெவ்வெறு இடங்களில் ஊர்வலமாகவும், தனித்தனியாகவும் திருப்பரங்குன்றம் புறப்பட்ட ஆயிரக்கணக்கான பா.ஜ., இந்து முன்னணி தொண்டர்கள், ஆங்காங்கே மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் சுற்றி நேற்று முதலே மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்து, திருப்பரங்குன்றம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. கோவிலுக்கு செல்லும் வழியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு திருப்பரங்குன்றம் வந்த ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் ஆர்பாட்டம் ஏன் என்பது பற்றி உரை நிகழ்த்தினர்.
News First Appeared in